வெள்ளி, 17 செப்டம்பர், 2010

குழந்தைகளுக்கு முட்டை! பெற்றோருக்கு மொட்டை !!

தமிழினத் தலைவர் கருணாநிதி அய்யா கோட்டூர்புரத்து நூலகத்தை திறந்து வச்சு பேசும் போது இனி அரசு பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மூன்று முட்டைகளுக்குப் பதில் ஐந்து முட்டைகள் வழங்கப்படும் என்று அறிவிச்சிருக்காரு. நல்ல விசயம்தான். ஆனா முட்டை போட்ட கையோடு பெற்றோருக்கு நீதிமன்றம் மூலம் பட்ட நாமம் போட்டதைப்பத்தி மட்டும் அவரு ஒன்னும் சொல்லலை.

தமிழ்நாட்டுல இருக்குற பத்தாயிரத்து  சொச்சம் பள்ளிகளும் ஆண்டுக்கட்டணம் எவ்வளவு வசூலிக்கணும்னு அரசு நியமித்த கோவிந்தரதாசன் கமிட்டி நிர்ணயம் செஞ்சு உத்தரவு போட்டதும், அதை பாதிக்கும் மேற்பட்ட பள்ளிங்க எதிரத்து வழக்கு போட்டதும் கேள்விப்பட்டிருப்பீங்க.

ஆரம்பத்துல வழக்கு முடியாதுங்கறதுனால கமிட்டி நிர்ணயிச்ச கட்டணத்தை வசூலிக்கணும்னு சொன்னாங்க. அப்படியும் பல பள்ளிங்க அதை மீறி அதிக கட்டணம் வசூலிச்சாங்க. அதை எதிர்த்து பல பள்ளிங்களில பெற்றோருங்க ஆர்ப்பாட்டம் நடத்துனத தினசரி செய்தியில பாத்திருக்கலாம்.

இப்ப என்னன்னா அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தவு போட்டுருக்கு. இது படி பள்ளிங்க இஷ்டம் போல கட்டணம்  வாங்கலாம். வழக்கு பாட்டுக்கு ஆமை வேகத்துல நடக்கும்ங்குறதுன்னால தனியார் பள்ளி முதலாளிமாருங்களுக்கு கொண்டாட்டம்தான்.

கிருஷ்ணகிரி மாவட்டுத்துல போச்சம்பள்ளியில இருக்குற அண்ணா அறிவகம்ங்குற பள்ளிக்கூட பஸ் ஒரு மாணவனை அடிச்சுருச்சுன்னு பொது மக்கள் அந்த பள்ளியைத் தாக்கி எரிச்சிருக்காங்க. இதைக் கண்டித்து தனியார் பள்ளங்கல்லாம் நாளைக்கு செம்டம்பர் 17 அன்னைக்கு வேலை நிறுத்தம் செய்யுராங்களாம்.

தனியார் பள்ளி கூட்டமைப்பின் தலைவர் விசாலாட்சி இது சம்பந்தமா அறிக்கை ஒன்னு வெளியிட்டிருக்காங்க. அதுல இந்த சம்பவத்த விசாரிச்சு அரசு நட்ட நிவாரணம் கொடுக்கணும்னு சொல்லிட்டு நைசா ஒன்னு சொல்லியிருக்காங்க. அதன்படி இனிமேல் பெற்றோருங்க பள்ளி எதிரே ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கணுமாம்.

ஆக மொத்தம் கட்டணத்தையும் ஏத்திப்புட்டு எதுக்கவும் கூடாதுன்னு அவங்க ஆட்டம் போடுற நேரத்துலதான் கருணாநிதி முட்டை கதையை பெரிய சாதனையாக எடுத்து வுடுராறு.

சாத்தான் கி சாபம்? குழந்தைகளுக்கு நாமக்கல் முட்டை! பெத்தவங்களுக்கு திருப்பதி மொட்டை!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக